அமைச்சர் உதயநிதிக்கு செங்கலை பார்சல் அனுப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Udhayanidhi Stalin DMK BJP K. Annamalai Erode
By Thahir Feb 21, 2023 06:04 AM GMT
Report

திமுகவினர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்ற கூறி செங்கல் திருடனுக்கு செங்கலை பார்சல் அனுப்புகிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செங்கலை பார்சல் அனுப்பிய அண்ணாமலை 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக களம்காணும் கே.எஸ் தென்னரசு அவர்களை ஆதரித்து, நேற்று ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக கூட்டணிக்கட்சியான பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், "எய்ம்ஸ் செங்கல் திருடனுக்கும் எனக்கும் வேறுபாடு இருக்கிறது.

Annamalai sent brick parcel to Minister Udayanidhi

நான் வைத்துள்ள செங்கல் அதிமுக-பாஜக ஆட்சியின் ஒற்றுமை கொண்ட வளர்ச்சியை பறைசாற்றுகிறது. மத்தியில் பாஜகவும் - மாநிலத்தில் அதிமுகவும் சேர்ந்து ஆட்சி செய்து 11 மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

இந்த விஷயம் பட்டத்து இளவரசராக, மூன்றாம் தலைமுறையில் செல்வச்செழிப்புடன் பிறந்தவருக்கு தெரியாது. நான் இந்த செங்கலை செங்கல் திருடன் உதயநிதிக்கு அனுப்பி வைக்கிறேன். அவர்கள் கடந்த 2009ல் அளித்த வாக்குறுதிப்படி தர்மபுரிக்கு சிப்காட் மிக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.