இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த அண்ணாமலை

Sri Lankan Tamils K. Annamalai United States of America
By Karthikraja Jul 04, 2026 10:02 AM GMT
Report

இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க துணை நிற்பேன் என அண்ணாமலை பேசியுள்ளார்.

அமெரிக்காவில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FETNA) வும் நியூ ஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து பேரவையின் 39 வது தமிழ் விழா நடத்தி வருகிறது. 

இந்த விழாவில், ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

இதில் பேசிய அவர், "நாம் தயவு செய்து தமிழ் இனத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்க கூடாது. ஹிந்து என்கிற வட்டத்துக்குள் அடைக்க கூடாது. இஸ்லாமியர் என்ற வட்டத்துக்குள் அடைக்க கூடாது. கிறிஸ்துவர் என்ற வட்டத்துக்குள் அடைக்க கூடாது. 

எல்லாத்தையும் தாண்டி தமிழர் என்கிற வட்டம் பெரிய வட்டமாக இருக்க வேண்டும், அதில் எல்லோரும் இருக்க வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்கு துணை நிற்பேன்

அமெரிக்காவில் 4 லட்சம் இலங்கை தமிழர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 90,000 புலம்பெயர்ந்தோர் உள்ளனர்.

போரால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழும் இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்களுக்காக இனி துணை நிற்பேன்.

பாஜகவில் இருந்தபோதும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து உள்ளேன். இலங்கை தமிழர்களின் நல வாழ்வுக்கான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளேன்" என பேசியுள்ளார்.