துணை பிரதமராகும் மு.க.ஸ்டாலின் - அண்ணாமலை பரபரப்பு பேச்சு
தன்னை துணை பிரதமராகவும், தனது மகனை முதல்வராகவும் ஆக்க மு.க.ஸ்டாலின் காய் நகர்த்துகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் பாஜகவின் வேலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாலை, நிர்வாகிகள் கார்த்தியாயினி, வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் நோக்கத்தில் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற மாநில கட்சிகள் தேசிய கட்சிகளாகும் நோக்கத்தில் இருப்பதாகவும், தன்னை துணை பிரதமராகவும், தனது மகனை முதல்வராகவும் மாற்ற மு.க.ஸ்டாலின் கனவு காண்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.