பாகிஸ்தான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருக்காது - அண்ணாமலை ஆவேசம்
பாகிஸ்தான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருக்காது என அண்ணாமலை பேசியுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் பன்யான் அல் மர்சூஸ் என்ற பெயரில் இந்தியா மீது பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என இந்தியா மீதான தாக்குதலுக்கு பெயரிட்டுள்ள பாகிஸ்தான் - அதன் அர்த்தம் என்ன?
இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பான S-400 சுதர்ஷன் சக்ரா, மூலம் பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வானிலே தாக்கி அழித்து வருகிறது.
அண்ணாமலை
இதுபற்றி தூத்துக்குடியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, "பாகிஸ்தான் அதனுடய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ராணுவத்தின் கீழ்தான் பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் பிரச்னை இன்று நேற்று அல்ல. பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக் கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தான் நாம் தாக்கியுள்ளோம். ஆனால் பாகிஸ்தான் நம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நம் மீது போர் தொடுக்கும்போது நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் கோழைகள்.
திமுக பேரணிக்கு வரவேற்பு
இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளோம். பயங்கரவாதிகள் பூமியில் எங்கு ஒளிந்து இருந்தாலும், தேடிப்பிடித்து இல்லாமல் செய்து விடுவேன் என பயங்கரவாதத்திற்கு எதிராக மோடி சங்கல்பம் எடுத்து இருக்கின்றார்.
நாம் பெரிய பொருளாதார பலமுள்ள நாடு. பாகிஸ்தானுடன் சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப் போறதில்லை. போர் இன்று, நாளை முடியாது, இதற்கு மேல் நாம் போக தான் போகிறோம். இனி இந்தியாவில் ஒரு உயிரை எடுப்பதற்கு, பாகிஸ்தான் பலமுறை யோசிக்க வேண்டும்.
நாம் நினைத்தால், பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இருந்தே இல்லாமல் செய்து விடலாம். ஆனால் அறத்தின் அடிப்படையில் போர் தொடுத்து வருகின்றோம்.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக திமுக பேரணி நடத்துவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இந்திய அரசிற்கு முழுமையாக தன்னுடைய ஒத்துழைப்பையும் திமுக அரசு கொடுக்க வேண்டும்" என பேசினார்.