ஜூலை மாதம் DMK Files பாகம் 2 வெளியாகும்: அண்ணாமலை அறிவிப்பு

BJP K. Annamalai
By Irumporai May 12, 2023 08:57 AM GMT
Report

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை DMK Files முதல் பாகத்தை வெளியிட்ட நிலையில் ஜூலை முதல் வாரத்தில் இரண்டாவது பாகம் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

சமர்ப்பிக்க தான் தயார்

இன்று செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை, டிஆர் குறித்து மேலும் சில விவரங்களை தெரிவிக்க இருப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி பிடிஆர் ஆடியோவின் முழு வடிவம் தன்னிடம் இருப்பதாகவும் ஆனால் அதை வெளியிட்டால் பிடிஆர் தான் பகடைக்காயாக பயன்படுத்தப்படுவார் என்பதால் தான் வெளியிடவில்லை என்றும் ஒருவேளை பிடிஆர் ஆடியோ குறித்த வழக்கு என் மீது தொடுக்கப்பட்டால் அந்த முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜூலை மாதம் DMK Files பாகம் 2 வெளியாகும்: அண்ணாமலை அறிவிப்பு | Annamalai Says Dmk Files Second Release Date

DMKI Files

மேலும் DMKI Files இரண்டாம் பாகம் ஜூலை முதல் வாரம் வெளியாகும் என்றும் முதல் பாகத்தில் 12 நபர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டது போல் இரண்டாம் பாகத்தில் 21 நபர்களின் சொத்து பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதனை அடுத்து DMK Files மூன்றாம் பாகமும் வெளியிட உள்ளேன் என்றும் அண்ணாமலை கூறினார்.