நான் மோடியின் விசுவாசமான நாய்; அந்த பதவி அதுக்குதான் சமம் - எகிறிய அண்ணாமலை
தவெக நிர்வாகி அருண்ராஜ் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
அருண்ராஜ் சாடல்
ஈரோட்டில் தவெக மாநில பொதுச்செயலாளர் அருண்ராஜ், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “எங்கள் தலைவர் விஜய் சொன்ன டயலாக் யாருக்கு பொருந்துமோ, இல்லையோ அண்ணாமலைக்கு பொருந்தும்.

அவர் கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தா அவர் இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார். எங்கள் கட்சி தலைவர் எப்ப, எது பேசணும்னு அவர் சொல்ல தேவையில்லை, தலைவருக்கு தெரியும்” என அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.
இதற்கு தற்போது பதிலளித்துள்ள அண்ணாமலை, “இந்த அண்ணாமலை என்கின்ற நாயின் வாலை நிமித்த முடியாது. இந்த வால் இப்படி தான் இருக்கும். ஏனென்றால் இது உண்மையை பேசுகின்ற நாய். இது ஜால்ரா அடிக்கின்ற நாய் அல்ல.
அண்ணாமலை பதிலடி
ஒரு கட்சியில் சேர்ந்ததற்காக ஒரு சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்கும் நாய் அல்ல.இந்த நாயின் வால் சற்று வழைந்து தான் இருக்கும். அப்படித்தான் பேசும். அதை பெருமையாகவும் எடுத்துக்கொள்ளும். அதற்காக என்ன வந்தாலும் அதை பெருமையாகவும் ஏற்றுக்கொள்ளும்.
இது நன்றியுள்ள, விசுவாசமான நாய். மோடிக்காகவும், நாட்டு மக்ககளுக்காகவும், மற்ற சினிமா நடிகர்களுக்கு ஜால்ரா அடிக்க அரசு பதவியை விட்டுவிட்டு வரவில்லை. உன்னதமான கோட்பாடுகளுக்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்.
வருங்கின்ற காலங்களிலும் நான் பிரச்சனைகளை சந்திக்கத்தான் போகிறேன். வரும் காலத்திலும் இதனால் எப்படி பட்ட பிரச்சனைகள் வரும் என்பது எனக்கு தெரியும் அதையும் ஏற்றுக்கொள்ள தயார். ஜால்ரா அடித்துத்தான் அந்த பதவி எனக்கு தேவை என்றால், அந்த பதவி எனக்கு தேவையில்லை, அது என் ம*ருக்கு சமம்” என தெரிவித்துள்ளார்.