பூதாகரமாய் வெடித்த ரபேல் வாட்ச் விவகாரம் : அண்ணாமலையின் வாட்ச்சில் அப்படி என்ன சிறப்பு இருக்கு ?
பாஜக தலைவர் அண்ணாமலை தான் அணிந்து இருக்கும் வாட்ச் ரபேல் எடிஷன் வாட்ச் என்று கூறி உள்ளார். இதுதான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக உள்ளது.
ரபேல் வாட்சில் என்ன உள்ளது
அந்த வாட்சின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை குறித்து இந்த தொகுப்பில் காணலாம். இந்திய ராணுவத்தில் ரபேல் விமானத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.
ரபேல் விமானம் இந்தியா ராணுவத்தில் இணைந்த பிறகு இந்திய ராணுவத்தின் படை பலம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரபேல் விமானத்தை தயாரிக்கும் டஸால்ட் நிறுவனமும் பிரபல வாட்ச் நிறுவனமான பெல் அண்ட் ராஸ் நிறுவனமும் இணைந்து ஒரு வாட்சினை உருவாக்கியது.
வாட்சில் உள்ள சிறப்பம்சங்கள்
பால்கான் போர் விமானத்தை பாராட்டும் வகையில் அதன் 50 ஆம் ஆண்டு விழாவின் போது பால்கான் விமான மாடல் அடங்கிய வாட்சினை வெளியிட்டது பெல் அண்ட் ராஸ் நிறுவனம். அதன்பிறகு ரபேல் விமானத்தை கெளரவிக்கும் விதமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரபேல் மாடல் வாட்ச்சுகளை வெளியிட்டது .
இதன் விலை அப்போது 4.40 லட்சத்திற்கு விற்பனையானது , குறிப்பாக இந்த மாடல் 500 மட்டுமே உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்டது ,அதுவும் உடனடியாக விற்பனையானது . தற்போது இந்த வாட்சினைத்தான் அண்ணாமலை தனது கையில் கட்டியுள்ளார்,ஆட்டோமேட்டிக் டைப் வாட்சான இது கேசிங் செராமிக் மூலம் செய்யப்பட்டது.
ரபேல் விமானங்களில் பல்வேறு பாகங்கள் செராமிக் மூலம் தயாரிக்கப்பட்டது, இது விமானத்திற்கு மிகவும் வலிமையினை கொடுப்பதாகும். இந்த வாட்சில் இருக்கும் சிறப்பம்சங்கள் இது வாட் ஃரூப் மற்றும் sapphire கிளாஸ் இதன் கண்ணாடியில் பயன்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜிவ் காந்தி கேள்வி
இது தொடர்பாக திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி எழுப்பி உள்ள கேள்வியில், அண்ணாமலை கட்டியுள்ள watch விலை 8,00,000 மேல்.அதன் நிறுவனம் ஆடம்பர luxury watch செய்யும் bell and ross என்ற சுவிச்சர்லாந்த் நிறுவனம்.
அண்ணாமலை இதில் தேசியவாதி என பெருமை கொள்ள எதுவும் இல்லை. அதன் விலையும் குறைவு இல்லை இதை இவருக்கு யார் பரிசாக கொடுத்தார் என்பது தான் கேள்வி? என்று கேட்டுள்ளார்.
அண்ணாமலை பதில்
இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பதிலில், இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன.
நான் கட்டி இருக்கும் வாட்ச் ரப்பில் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது.
அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும். இந்திய ராணுவத்தின் ரபேல் விமானம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை ஓட்டும் பாக்கியம்தான் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அதை வைத்து உருவாக்கப்பட்ட வாட்சை அணியும் பாக்கியம் கிடைத்து உள்ளது.
எனக்கு இது போதும். நான் தேசியவாதி அதனால் இந்த வாட்சை அணிகிறேன். இதை வைத்து பிரிவினைவாதிகள்தான் சர்ச்சை செய்வார்கள். உலகில் இது போல 500 வாட்ச்கள்தான் உள்ளது. இதில் என்னுடைய வாட்ச் 149ஆவது வாட்ச்சாகும், என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
அதே சமயம் தனது பாதயாத்திரையின் போது தனது முழு சொத்து விவரங்களை பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் முன்பு வெளியிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார், இது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.