நடிகர் விஜய்யின் அரசியல் குறித்த பேச்சு - அண்ணாமலையின் அதிரடி பதில் இதுதான்!
நடிகர் விஜய்யின் அரசியல் குறித்த பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் பேச்சு
லியோ திரைப்படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் "தளபதி என்றால் என்ன அர்த்தம். மக்கள் தான் மன்னர்கள். நான் உங்கள் கீழ் இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்" என தனது அரசியலை சூசகமாக கூறினார்.
மேலும், நிகழ்ச்சி தொகுப்பாளர் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் வருடத்தை குறிப்பிட்டு கேள்வியெழுப்பினார். அதற்கு விஜய் 'கப்பு முக்கியம் பிகிலு' எனக்கூறி அரங்கையே அதிரவைத்தார். தான் அரசியலுக்கு வருவதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத விஜய்யின் இது போன்ற பேச்சுகள்தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
அண்ணாமலை கருத்து
இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் குறித்த பேச்சுகளுக்கு கருத்து தெரிவித்த பாஜக மாநில தலை அண்ணாமலை "ஒவ்வொருத்தர்கள் ஒவ்வொரு விதமாக கூறுகிறார்கள். யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன் என நான் முதலில் கூறியுள்ளேன்.
யார் அரசியலுக்கு வருவதற்கும் யாரும் தடையாக இருக்கக்கூடாது. மக்களுக்கு தேர்வுகள் இருக்க வேண்டும். ஒரு கட்சி இருப்பதற்கு ஆறு கட்சி இருந்தால் இன்னும் நல்லது தான். 30, 40 ஆண்டுகளாக அரசியலில் பழையவர்களே இருந்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய் உட்பட நிறைய புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும். தங்களுடைய யோசனைகளை மக்களிடம் தெரிவிக்கட்டும். இறுதியில் மக்கள் யாரை முடிவுசெய்கிறார்களோ, அதை ஏற்றுக்கொள்ளலாம்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.