அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி : கனிமொழிக்கு அண்ணாமலை பதில்

BJP K. Annamalai
By Irumporai Apr 28, 2023 03:48 AM GMT
Report

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துககொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

கனிமொழி எம்பி கேள்வி

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இழிவுபடுத்தும் வகையில் செயல்படும் பாஜக கட்சியினரை தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார் என கேள்வி எழுப்பியுள்ளார். 

அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி : கனிமொழிக்கு அண்ணாமலை பதில் | Annamalai Replies Kanimozhi Tamil Thai Vaazhthu

அண்ணாமலை பதில் 

இதனிடையே, கனிமொழியின் ட்விட்டர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள அண்ணாமலை, ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும் என்பது நியதி என்றும், அந்த நியதியை தான் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களை உங்களிடம் இருந்தும், திமுகவின் மலிவான அரசியலில் இருந்தும் காப்பாற்றுவதே எங்களின் ஒரே பணி என்றும் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.