மன்னிப்பு முடியாது, இழப்பீடும் தர முடியாது : டி.ஆர்.பாலுவுக்கு சவால் விடும் அண்ணாமலை
சொத்துப்பட்டியல் விவகாரத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அனுப்பிய நோட்டீஸுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சொத்துபட்டியல் விவகாரம்
சொத்துப்பட்டியல் என்ற பெயரில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக ஏற்கெனவே திமுக சார்பிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, டி.ஆர்.பாலு அனுப்பிய நோட்டீஸில், அண்ணாமலை தனது கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் 100 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மன்னிப்பு கேட்க முடியாது
இந்த நிலையில், தற்போது அண்ணாமலை அனுப்பியுள்ள பதில் நோட்டீஸில், மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தும் தனது குரலை ஒடுக்கும் முயற்சியே இது என குற்றஞ்சாட்டியுள்ளார். டி.ஆர்.பாலு குறித்து தாம் வெளியிட்ட குற்றச்சாட்டுகள், புள்ளி விவரங்கள் அனைத்தும் சரியானவையே என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தனது குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கோரப்போவதில்லை என்றும், இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தால் அதனை சட்டபூட்வமாக எதிர்கொள்ள தயார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.