ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால், அண்ணாமலை பாஜகவில் இருக்கிறார்- காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்
ரஜினிகாந்த் கட்சி தொடங்காத காரணத்தால் தான் அண்ணாமலை பாஜகவில் நீடிக்கிறார் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.
கார்த்திக் சிதம்பரம்
சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இன்று, ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதியில் புதியதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கினார் அப்போது நிகழ்ச்சியில் பேசிய கார்த்திக் சிதம்பரம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சித்தாந்த ரீதியாக பாஜகவில் இணைந்து பணியாற்றி வருபவர் இல்லை எனக் கூறிய கார்த்திக்சிதம்பரம்.
பாஜக சித்தாந்தம்
மேலும், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காத காரணத்தால் அண்ணாமலை தற்போது பாஜகவில் உள்ளார் என கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறி வந்து,பிறகு தனது உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தால் அந்த முடிவை கைவிட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்து.