பாமக மேடையில் ராமதாஸ் - அன்புமணி மோதல்; அண்ணாமலை கொடுத்த ரியாக்சன்
பாமக பொதுக்குழுவில் நடந்த மோதல் குறித்து அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "என்னை அரசியல்வாதியாக பார்க்க வேண்டாம். பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக பாருங்கள். சிஸ்டம் முழுவதுமாக செயழிந்துள்ளது.
கருத்து பரிமாற்றம்
FIR வெளியாக வாய்ப்பே இல்லை. ஆனால் காவல்துறை அதை வெளியிட்டுள்ளது. முன்னால் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் குழு அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள். கருத்து சுதந்திரம் இல்லமால் போய் விட்டது. எனவே வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்தேன். உயர்நீதிமன்றம் இன்றைக்கு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்" என பேசினார்.
குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "திருமாவளவன் தமிழ்நாட்டில்தான் இருக்கிறாரா என தெரியவில்லை. அவர் திமுக கூட்டணியில் இருப்பதற்காக இப்படி பேசுவதை ஏற்க முடியாது" என கூறினார்.
பாமக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து கேள்வி எழுப்பிய போது, "அது கருத்து வேறுபாடு அல்ல, கருத்து பரிமாற்றம்" என தெரிவித்துள்ளார்.