திவால் ஆகும் நிலையில் தமிழக அரசு? அண்ணாமலை கடும் விமர்சனம்!
திவால் ஆகும் நிலையில் தமிழக அரசு உள்ளாதா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை
தமிழகத்தில் ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் போர்டு, ஹைடெக் லேப் என பல விதமான வசதிகளை தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பாடு வருகிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் போர்டு போன்றவற்றை அரசுப் பள்ளி மாணவர்கள், மாணவிகள் என ஏராளமானோர் உபயோகித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளதால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அலுவலக வேலைகளை சரிவரச் செய்ய முடியாமல் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். அதேபோல, ஆசிரயர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பு பணியிலும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? முதலமைச்சர் முக ஸ்டாலின் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக அரசு?
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம், பல மாதங்களாகச் செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது.
இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது. திமுக ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது.
சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் வரை கடனில் இருக்கிறது தமிழகம். வாங்கும் கடன் முழுவதும், அன்றாடச் செலவுகளுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்று, சிஏஜி தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல், அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில் இருக்கிறதென்றால், உண்மையில், திமுக அரசு, தமிழக அரசின் நேரடி வரி வருமானத்தையும்,
ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70 சதவீதம் நிதியையும் எந்த வகையில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?. திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். என கூறப்பட்டுள்ளது.