போதை புழக்கம் - ஏன் முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை? மாநில அரசுக்கு அண்ணாமலை கேள்வி

M K Stalin Tamil nadu DMK BJP K. Annamalai
By Karthick Apr 22, 2024 09:02 PM GMT
Report

தமிழகத்தில் கஞ்சா போதையில் தாக்குதலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றது.

போதை புழக்கம்

அண்மையில் கூட, அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியானது. அதன் பின்னர் தான், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கஞ்சா போதையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

annamalai-questions-on-drugs-in-tamil-nadu

அவர்கள் விரைவில் கைதாக வேண்டும் என கோரிக்கைகளும், மாநிலத்தில் போதை பொருள் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தலும் அதிகளவில் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளரான அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சர்ச்சை பேச்சு - பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!

சர்ச்சை பேச்சு - பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!

அவரின் பதிவு வருமாறு,

அண்ணாமலை பதிவு

தமிழகத்தில், கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள், காவல்துறையினரைத் தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள், கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது, இன்று, தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரைத் தாக்கிய நபர் என கடந்த மூன்று நாட்களில், வெளிவந்த செய்திகள், பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

annamalai-questions-on-drugs-in-tamil-nadu

தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. ஆனால், குற்றம் நடந்து செய்தியான பிறகே குற்றவாளிகளைக் கைது செய்ய முன்வரும் காவல்துறைக்கு, கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? ஏன் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை?

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாகச் செயல்பட்டதைக் கண்டுகொள்ளாமல், மூன்று ஆண்டுகளாகக் கோட்டை விட்டது போல, கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது.