இந்த கேள்விய கேட்டா எங்க போவாரு முதல்வர் - அண்ணாமலை ஆவேசம்..!

Tamil nadu BJP K. Annamalai
By Karthick Jan 06, 2024 10:52 AM GMT
Report

கூட்டணி கட்சிகள் திமுகவிற்கு ஜிங்கு - சாக் அடிக்கிறார்கள் என்று அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நிர்மூலம்

32 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜனவரி 9 -ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் போது, திமுக வந்த பிறகு போக்குவரத்து துறையை நிர்மூலம் ஆக்கிவிட்டனர் என குற்றம்சாட்டி, பொங்கல் நேரத்தில் காலவரையற்ற போராட்டம் நடைபெற்றால் என்ன நடக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.

annamalai-questions-mk-stalin-in-fund-problem

ஜல்லிக்கட்டு குறித்தும் பேசிய அவர், அந்த விளையாட்டிற்கு சம்மந்தமே இல்லாமல், கீழக்கரை என்ற இடத்தில காட்டியதால் ஜல்லிக்கட்டு வீரர்கள் வர மறுக்கிறார்கள் என்று கூறிய அவர், ஜல்லிக்கட்டை தடை செய்ய காரணமாக இருந்த திமுக, தற்போது அந்த மைதானத்திற்கு கலைஞர் ஜல்லிக்கட்டு மைதானம் என்று பெயர் வைத்துள்ளதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் வினவினார்.

ஜிங்கு - சாக் 

வரும் 2024-ஆம் ஆண்டு தேர்தல் மோடிக்கான தேர்தல் என குறிப்பிட்டு, கூட்டணிக்கு வரும் கட்சிகள் மோடியை பிரதமராக ஏற்றுக்கொண்டால் போதும் என்றும் கூறினார். அவரை ஏற்றுக்கொண்டு பல கட்சிகள் தேர்தல் நேரத்தில் தங்கள் கூட்டணி வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அவர்களுக்கு ஜிங்கு - சாக் அடிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டி, அந்த கூட்டணியுடன் எங்களை ஒப்பிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

annamalai-questions-mk-stalin-in-fund-problem

தமிழகத்தில் பாஜக பலமாக இருப்பதற்காகவே நான் இன்று இருக்கேன் என்று தெரிவித்து, அந்த வேலையை நான் நன்றாகவே செய்துள்ளேன் என்று தெரிவித்தார். நிதி பகிர்வு குறித்து பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் 60% வரியை செலுத்தும் கொங்கு மண்டலத்திற்கு என்ன செய்தீர்கள் என்று நான் கேட்டால், தமிழக முதல்வர் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக்கொள்வார் என்றும் அழுத்தமாக அவர் கேள்வியை எழுப்பினார்.