3 சென்ட் நிலம் பாருங்கண்ணா..முருகனுக்கு வாங்கி கொடுப்போம் - அண்ணாமலையின் நெகிழ்ச்சி செயல்!
பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுப்பதாக கூறியிருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை .
நிர்வாகி வீட்டில் அண்ணாமலை
பாஜக சார்பில் ஊழலை எதிர்த்து "என் மண் என் மக்கள் " என்ற பாதயாத்திரையை தொடங்கினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இந்த நடைப்பயணம் நேற்று ராமேஸ்வரத்தில் தொடங்கியாது. இந்த பயணம் இறுதியாக சென்னையில் முடிவடைய உள்ளது. இந்த பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
பின்னர் ராமேஸ்வரம் பாஜக நிர்வாகி முருகன் என்பவரது வீட்டிற்கு அமித்ஷாவை அண்ணாமலை அழைத்துச் செல்வதாக இருந்தது. ஆனால் நேரம் இல்லையென்ற காரணத்தால் அமித் ஷா அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் கட்சியினருடன் அண்ணாமலை மட்டும் பாஜக நிர்வாகியின் வீட்டிற்கு சென்றார்.
அங்கு அவர் தேநீர் அருந்தினார். அப்போது முருகனின் ஏழ்மை பற்றியும் அவர் வாடகை வீட்டில் தங்கியிருப்பதைப் பற்றியும் கேட்டறிந்தார் அண்ணாமலை.
நெகிழ்ச்சி செயல்
பேசிக்கொண்டிருக்கும்போதே பக்கத்திலிருந்த முக்கிய பாஜக பிரமுகரிடம் அண்ணாமலை " 3 சென்ட் நிலம் பாருங்கண்ணா, முருகனுக்கு நிலத்தை நாமே வாங்கி கொடுப்போம்" என்றார். இதனைக் கேட்ட பாஜக நிர்வாகி முருகன் திக்குமுக்காடி நன்றி சொல்ல அண்ணாமலை காலில் விழச் சென்றார்.
உடனே அவரை தடுத்து நிறுத்திய அண்ணாமலை "அதெல்லாம் கூடாது என்று சொன்னார். இந்த செயல் அங்கிருந்தவர்களுக்கும் பாஜகவினர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.