ஸ்டாலினுக்கு பிரதமர் ஆசை வந்து விட்டது : வம்பிழுக்கும் அண்ணாமலை

pm annamalai bjptamilnadu cmstalin
By Irumporai Nov 05, 2021 03:51 PM GMT
Report

 2024 ஆம் ஆண்டு துணை பிரதமராக வேண்டும் என ஸ்டாலின் ஆசைப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “முல்லை பெரியாற்றில் 138.5 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால் 136 அடி இருக்கும் போதே தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுவாக முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் போது தேனி மாவட்ட ஆட்சியரும், தமிழக அமைச்சரும் கலந்து கொள்வார்கள்.

ஆனால் இந்த முறை அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அது ஏன் என தெரியவில்லை. அதற்கான காரணத்தை தமிழக அரசு விளக்க வேண்டும். என கூறினார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு துணை பிரதமராக வேண்டும் என ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அதற்கு கம்யூனிஸ்டுகளின் ஆதரவு தேவை என்பதால் கேரளாவிற்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்துள்ளார் என்ற சந்தேகம் எழுவதாக கூறினார்.

அதே சமயம் இன்று அமைச்சர் துரைமுருகன் முல்லை பெரியாறு அணையை பார்வையிட சென்றுள்ளார். இது  கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்த பயனும் இல்லை. எனக் கூறிய அண்ணாமலை.

தமிழகத்தில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.246 கோடியே 13 லட்சத்திற்கு ஊழல் நடந்து இருக்கிறது. அதனை தமிழக அரசு  விரைவாக  மீட்க வேண்டும் என கூறியுள்ளார்.