இதை மட்டும் நீருபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - அண்ணாமலை சவால்
கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர்.பாலு பேசிய வீடியோ முழுமையானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பதில்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை பாஜகவின் நிரூப்பிதற்கான தேர்தல் இது இல்லை. எங்களது இலக்கு நாடளுமன்ற தேர்தல் தான். கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர்.பாலு பேசிய வீடியோ முழுமையானது.
வீடியோ தடவியல் ஆய்வு செய்து டேப் எடிட் செய்யப்பட்டது என நிரூபணமானால் அரசியலைவிட்டு விலக தாயார். கே.என்.நேரு, ஈ.வி.கே.எஸ் பேசிய ஒரிஜினல் வீடியோவை எ.வ.வேலு கூறும் இடத்தில் தருகிறோம். தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார் என்பது ஒரு குற்றச்சாட்டு.
பதவி விலக தயார்
ஆனால் அதைவிட அமைச்சர் எவ்வாறு அவதூறாக பேசிகிறார் என்பது அதில் பதிவாகியுள்ளது. வீடியோவை எடிட் செய்ததாக எ.வ.வேலு நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். டி.ஆர்.பாலு பேசிய வீடியோவை நாளை மாநில தேர்தல் ஆணையத்திடம் வீடியோவை ஒப்படைக்க உள்ளோம். எனக் கூறினார்.