அதிமுகவுடன் விரிசலா? மோடி, அமித் ஷாவை சந்திக்க அண்ணாமலை திட்டம்
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் மார்ச் 26 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடியை சந்திக்கும் அண்ணாமலை
அண்ணாமலை பாஜக - அதிமுக கூட்டணி ஏற்பட்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக கூறியதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மேலும் தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிடவேண்டும் என அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் மார்ச் 26 ஆம் தேதி டெல்லி சென்று, பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், சந்திப்பில் தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பாஜவில் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.