அண்ணாமலையின் பாதயாத்திரை Schedule மாற்றம் - காரணமான மத்திய அமைச்சர்?
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் வருகை தள்ளிப்போனதால் அண்ணாமலையின் பாதயாத்திரை பயணத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலை பாதயாத்திரை
9 ஆண்டுக்கால மத்திய பாஜகவின் ஆட்சியை குறித்து மக்களுக்கு எடுத்துரைத்திட தமிழகம் முழுவதும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 28-ஆம் தேதி துவங்கி வைத்து இந்த பாதயாத்திரை தற்போது மதுரையை அடைந்துள்ளது.
நடைபயணத்தில் மாற்றங்கள்
இந்த நடைப்பயணத்தில் அவருடன் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என முன்னரே அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நடைப்பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள இருப்பதால் அவரால் இந்த நடைபயணத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவர் மீண்டும் நேரம் ஒதுக்கிய பிறகு நடைபயணத்தில் அவர் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர் பிரசாத் ரெட்டி விளக்கம்
இது குறித்து பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தெரிவிக்கும் போது, ஓய்வு காரணமாக நிறுத்தப்பட்ட நடைபயணம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி மீண்டும் திருச்சுழியில் தொடங்கும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி என அண்ணாமலையின் நடைபயணம் தொடரும் என அமர் பிரசாத் ரெட்டி குறிப்பிட்டார்.
மதுரையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும், சங்கரன்கோவிலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், திருநெல்வேலியில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவும் அண்ணாமலையின் நடைபயணத்தில் பங்கேற்கின்றனர் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.