கூட்டத்தின் நடுவே Love you தலைவா சார்ட்டுடன் வந்த சிறுவன்... நெகிழ்ச்சியடைந்த அண்ணாமலை

Tamil nadu BJP K. Annamalai
By Karthick Aug 15, 2023 05:36 AM GMT
Report

Love you தலைவா என்ற வாசகத்துடன் வந்த சிறுவனை அருகில் அழைத்து அந்த Chart Paper'இல் கையெழுத்திட்டு நலம் விசாரித்த அண்ணாமலையின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அண்ணாமலை பாதயாத்திரை  

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 28-ஆம் தேதி துவங்கிய இந்த பாதயாத்திரையில் பல தரப்பட்ட மக்களையும் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார்.

annamalai-pathayathirai-incident

அந்தந்த இடங்களில் அண்ணாமலை, மக்களிடம் உரையாற்றியும் வருகிறார். இந்நிலையில், அண்ணாமலை காண சிறுவன் ஒருவன் Love you தலைவா என்ற வாசகத்துடன் கையில் chart ஒன்றை எடுத்து கொண்டு வந்துள்ளான்.

நெகிழ்ச்சியடைந்த அண்ணாமலை

annamalai-pathayathirai-incident

அந்த சிறுவனை அருகில் அழைத்த அண்ணாமலை, நலம் விசாரித்த பின்னர் அந்த chart paper'இல் கையெழுத்திட்டு சிறுவனின் தந்தையிடமும் சிறுவன் குறித்து கேட்டறிந்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.