We The Leaders பொள்ளாச்சியில் முதல் மாநாடு

K. Annamalai
By Fathima Jul 02, 2026 10:03 AM GMT
Report

We The Leaders அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளதாக அந்த அமைப்பின் நிறுவனர் கே.அண்ணாமலை அறிவித்துள்ளார்.

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகி We The Leaders என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார், இந்த அமைப்பில் சேர்வதற்கான பிரத்யேக இணையதளம் ஒன்றையும் அறிமுகம் செய்தார்.

தற்போது 18.82 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார்.

ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடந்து வருவதாகவும், தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அண்ணாமலை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

அமைப்பை தொடங்கும் போதே விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என அறிவித்த அண்ணாமலை, அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்திருந்தார்.  

We The Leaders பொள்ளாச்சியில் முதல் மாநாடு | Annamalai Party First Meeting In Pollachi