2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? - அண்ணாமலை கொடுத்த பதில்

ADMK BJP K. Annamalai
By Karthikraja Dec 17, 2024 07:30 PM GMT
Report

 அதிமுகவுடன் கூட்டணி என்று மறுக்கவில்லை என அண்ணாமலை பேசியுள்ளார்.

அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை சில அரசியல் தலைவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். 

annamalai

ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்த திட்டத்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.  2029-ஆம் ஆண்டுக்கு பிறகு நடக்கக் கூடிய நாடாளுமன்ற தேர்தலின் காலம் எவ்வளவு ஆண்டுகள் இருக்குமோ, அது தான் சட்டமன்றத்தின் காலம் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி

இந்தியாவில் முதல் 4 தேர்தல்கள் ஒரே நாடு ஒரே தேர்தல்தான். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கலைப்பினால்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தள்ளிப்போனது. 2024 நாடாளுமன்ற தேர்தலிலே மக்கள் மும்முனை போட்டியை பார்த்துள்ளனர். 

annamalai bjp

2026ல் ஒரு புதிய அரசியல் களத்தை பார்க்கப்போகிறோம். திராவிடக் கட்சிகள் தனியாக ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஒரு புது விதமான அரசியலை தமிழகத்தில் கொண்டு வர மக்கள் தயாராக உள்ளனர்.

திராவிடக் கட்சி அல்லாத ஒரு கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கிறது. பாஜகவிடம் வலிமையான கூட்டணி இருக்கிறது. அதிமுக கூட்டணி குறித்து காலமும் சூழலும் முடிவு செய்யும். கூட்டணி இல்லை என்று மறுக்கவில்லை" என பேசியுள்ளார்.