சீமான் எதற்கு எங்களை ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
சீமான் எதற்கு எங்களை ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. சீமான் எதற்கு எங்களை ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.டி.ராகவன் வீடியோ வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்து கருத்து தெரிவித்த நாம்தமிழர் கட்சித்தலைவர் சீமான் ஒருவரின் அனுமதி , ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம், அநாகரிகம். படம்பிடித்தவரை கைது செய்திருக்க வேண்டும்.
உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார். சட்டசபைக்குள் ஆபாச படம் பார்ப்பது தவறு என்று சொல்லலாம். ஒருவர் தனிப்பட்ட முறையில் அறையில் பேசுவதை படம் பிடிக்கிற அளவு கேடுகெட்ட சமூகமாக மாறி விட்டது , ஒட்டு கேட்பது , பதிவு செய்து வெளியிடுவதால் என்ன சாதிக்க முடியும். ஒருவரின் அனுமதி இல்லாமல் ஆடியோ , வீடியோவை படம் பிடிப்பது தவறு.

அதை ஏன் பார்க்க வேண்டும், அவரா பார்க்க சொன்னார் ? என்று பேசினார். கே.டி.ராகவனை ஆதரித்து பேசியதற்கு சீமான் கடும் விமர்சனத்திற்கு உள்ளானர். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி சீமான் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.