எனது சொத்து விவரங்களை வெளியிட நான் ரெடி ? நீங்க .. திமுகவுக்கு சவால் விடும் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலையும் , அமைச்சர் செந்தில்பாலாஜியும் மோதி கொள்வது வழக்கமான ஒன்று , குறிப்பாக ஒருவரையொருவர் ஆதராம் இருக்கா ?என கேட்டு ட்விட்டரிலும் , பேட்டிகளின் மூலமாக மோதி கொள்வார்கள்.
அண்ணாமலை ரபேல் வாட்ச்
இந்த நிலையில் அண்ணாமலை கட்டிய வாட்ச் தற்போது பேசு பொருளானது, அமைச்சர் செந்தில்பாலஜி அண்ணாம்லை குறித்து கூறும் போது : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதற்கு அவர் பதிலளித்தார்.
Since @arivalayam wants to fight on the issue of corruption with me, I’m more than ready to do that.
— K.Annamalai (@annamalai_k) December 18, 2022
The details of my Rafale watch, which was purchased in May 2021, along with its bill (before I became TN BJP President), All of my lifetime Income Tax statements, ... (1/5)
இதனிடையே, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை, வாங்கியது எப்படி என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் : திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
நான் தமிழக பாஜக, தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள் போன்றவற்றை நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.
திமுகவுக்கு சவால்
நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் நடைபயணத்தை மேற்கொள்வதாக , அண்ணாமலை தெரிவித்துள்ளார்.