அண்ணாமலை குறித்து அவதூறு கருத்து : காயத்ரி ரகுராம் மீது பாஜக புகார்
அண்ணாமலை மீது அவதூறு பரப்புவதாக காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை குறித்து அவதூறு
தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி கட்சியில் விலகிய காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களை தனது ட்விட்டர் பதிவின் மூலமாக கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
காயத்ரி மீது வழக்கு பதிவு
இந்நிலையில், அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் காயத்ரி ரகுராம் அவதூறு பரப்பி வரும் நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தமிழக பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இன்றும் கூட 2ஜி ஊழல் பற்றி அனைவருக்கும் தெரியும், முந்தைய திமுக ஆட்சி பற்றி அனைவருக்கும் தெரியும். இப்போது ஏன் கதையை மாற்றுகிறீர்கள்.? ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக மற்றும் அனைவரின் சொத்து ஊழல் பட்டியலை கொடுக்க போகிறீர்கள் அது தான் உங்கள் கதை என்று விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.