ரூ.500 கோடி தரமுடியாது: ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில்

BJP K. Annamalai
By Irumporai Apr 21, 2023 02:44 PM GMT
Report

ரூ.500 கோடி நஷ்ட ஈடு இழப்பு தர முடியாது என ஆர் எஸ் பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அண்ணாமலை  

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் அமைச்சர்கள் மீதான சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை அடுத்து 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அந்த நோட்டீசுக்கு அண்ணாமலையின் வழக்கறிஞர் பதில் நோட்டீஸ் அளித்துள்ளார். 

ரூ.500 கோடி தரமுடியாது: ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில் | Annamalai Notice To Rs Bharathi

பதில் நோட்டீஸ்

திமுக குறித்த அண்ணாமலையின் கருத்து மற்றும் குற்றச்சாட்டு உண்மையே. யாரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவமானம் செய்வது செய்தியாளர் சந்திப்பில் நோக்கமில்லை. சொத்து பட்டியல் விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி கேட்டபடி ரூ.500 கோடி இழப்பீடு தரமுடியாது.

ரூ.500 கோடி இழப்பீடு தரும்படி சட்டத்திலும் இடம் இல்லை. திமுகவினர் சேர்த்துள்ள ஊழல்களை அடிப்படை ஆதாரங்களுடன் வெளிகொண்டு வந்திருக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.