திடீரென திருமாவளவனை சந்தித்த அண்ணாமலை - எல்.முருகன்!!

Thol. Thirumavalavan Tamil nadu K. Annamalai
By Matara Kelum Oct 23, 2023 10:15 AM GMT
Report

 இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அண்ணாமலை மற்றும் எல்.முருகன் சந்தித்தது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.   

திருமாவளவன்

சில வாரங்கள் முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது மீண்டும் கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றார். தமிழக அரசியல் களம் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அதனை குறித்து கூட்டணி விவகாரங்களும் தொடர்ந்து தலைப்பு செய்தியாகவே இருந்து வருகிறது.

திமுக கூட்டணியில் தான் தங்கள் கட்சி நீடிக்கிறது என்று விசிக'வின் முக்கிய தலைவரான வன்னி அரசு தெளிவுப்படுத்திய நிலையில், சனாதன ஒழிப்பில் தீவிரம் காட்டும் தாங்கள் இந்தியா கூட்டணியில் தான் நீடிக்கிறோம் என்று திருமாவளவனும் தெரிவித்திருந்தார். 

annamalai-meets-thirumavalavan-recently

முன்னதாக தமிழக சட்டமன்ற உறுப்பினரான வானதி ஸ்ரீனிவாசன் தங்கள் கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் சில மாற்றங்கள் ஏற்படுமா? என்றும் பெரும் பேச்சுக்கள் எழுந்தன.

பெண்களை மேலும் கீழும் பார்ப்பவர்களுக்குதான் பாஜகவில் பதவி - விளாசிய பிரபலம்!

பெண்களை மேலும் கீழும் பார்ப்பவர்களுக்குதான் பாஜகவில் பதவி - விளாசிய பிரபலம்!

இந்நிலையில் இன்று, மறைந்த ஆன்மீகவாதி பங்காரு அடிகளாருக்கு மரியாதை செலுத்த வந்த இடத்தில் திருமாவளவனும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பரஸ்பரம் நேரில் சந்தித்து கைகுலுக்கினார். இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றது.