இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!
இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலை சந்திப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது திமுக அமைச்சர்களின் சொத்து விவரம் அடங்கிய கோப்புகளை ஆளுநரிடம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் டாஸ்மார்க் தொடர்பான வெள்ளை அறிக்கையையும் தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் டிஎம்கே பைல்ஸ் என்ற திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் என தயாரித்து வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து டிஎம்கே பைல்ஸ் 2 என்ற ஊழல் பட்டியலையும் வெளியிட உள்ள அறிவித்துள்ள நிலையில், இன்று ஆளுநரை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.