ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு..!
ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்திக்க உள்ளதாக இன்று காலை செய்திகள் வெளியாகின.
அதன் படி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது திமுக அமைச்சர்களின் சொத்து விவரம் அடங்கிய கோப்புகளை ஆளுநரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் ஊழல் பட்டியல் வழங்கியதாக தகவல்
அதே சமயம் டாஸ்மாக் தொடர்பான வெள்ளை அறிக்கையையும் தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் டிஎம்கே பைல்ஸ் என்ற திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் என தயாரித்து வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து டிஎம்கே பைல்ஸ் 2 என்ற ஊழல் பட்டியலையும் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இன்று ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.