ரூ. 2000 நோட்டுகள் மாற்ற திமுகவின் பலே பிளான் : நிதியமைச்சருக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்

BJP K. Annamalai
By Irumporai May 21, 2023 05:01 AM GMT
Report

2000 ரூபாய் நோட்டுகளை திமுகவினர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் மூலம் மாற்ற முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சருக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

ரூ2000 நோட்டு 

மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்த அறிவிப்புக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.  

ரூ. 2000 நோட்டுகள் மாற்ற திமுகவின் பலே பிளான் : நிதியமைச்சருக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம் | Annamalai Letter Nirmala Sitharaman

அண்ணாமலை கடிதம்

திமுக அரசை பற்றி உங்களுக்கு தெரியும் நவீனமாக ஊழல் செய்வதில் வல்லவர்கள். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மகனும் மருமகனும் 30000 கோடி ரூபாயை வருமானமாக ஏற்றி உள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவரை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை திமுகவினர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் மூலம் மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே 2000 ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுகிறார்கள் என்பதை வங்கியில் கண்காணிக்க வேண்டும் என அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.