நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது - ஜெயக்குமார் எச்சரிக்கை..!
நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு முடிவு எடுக்கும்
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க முடியாது எனவே ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்பது உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது இது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். இந்நிலையில் செய்தியாளர்கள் அதிமுக - பாஜக இடையே அடிக்கடி ஏற்படும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.
அண்ணாலைக்கு நல்லது
அதற்கு பதில் அளித்த அவர், அதிமுகவை தொட்டால் கெட்டார் என்று அவருக்கு தெரியும். ஏற்கனவே கூறியது போல இது போன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு.
செல்லுார் ராஜாக இருந்தாலும் அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் யாராயிருந்தாலும் விமர்சனம் செய்வதே நாங்கள் எதிர் விமர்சனங்களை சந்திக்ககூடிய சூழல் கண்டிப்பாக ஏற்படும்.
அந்த நிலைமைக்கு அண்ணாமலை ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது என்று தெரிவித்துள்ளார்.