விரைவில் மாற்றப்படும் தமிழக பாஜக தலைவர்..! பரபரப்பை ஏற்படுத்திய பாஜக மூத்த நிர்வாகி
நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், விரைவில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுவார் என பாஜகவின் மூத்த நிர்வாகி எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சூழ்நிலை
அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறிய நிலையில், அது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்களே காரணம் என கூறப்படுகின்றது. இது குறித்து அதிமுகவின் தீர்மானத்திலும், கட்சி மாநில தலைமையின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி தான் கூட்டணி முறிவு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தான் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுமா? என்ற செய்திகளும், கேள்விகளும் கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் எழுந்துள்ளது. ஆனால், தற்போது வரை தமிழக பாஜகவோ, தேசிய பாஜக தலைமையும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
எஸ்.வி.சேகர் பகிர்
சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் சந்தித்த அவர், தமிழகத்தில் மாநில பாஜகவுடன் இருந்த கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது என கூறி அதனால் இதனால் மோடிக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வருவது உறுதி என நம்பிக்கை தெரிவித்த எஸ்.வி.சேகர், அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவமற்ற நபரை தமிழகத்தில் மாநிலத் தலைவராக அமர்த்தியது தான் தவறு.என்றும் மத்திய பிரதேச தேர்தல்களில் அண்ணாமலை பார்வையாளராக மாற்றப்படுவார் என்றார்.
விரைவில் தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என பகிர் தகவல் அளித்த அவர், அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும் போது பாஜக ஜெயிக்கும் சீட்டுகள் பூஜ்யமாக தான் இருக்கும். என விமர்சனம் செய்தார்.