அண்ணாமலை ஒருபடித்த முட்டாள் : கொந்தளித்த அமைச்சர்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வேலை வெட்டி இல்லாத படித்த முட்டாள் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
அமைச்சர் பதவி விலகவேண்டும்
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஏற்று அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என கரூர் மாவட்ட பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.

இல்லையெனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இது குறித்த கேள்விக்கு து குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள சரத்துகளை தெளிவாக படித்துப் பார்க்க வேண்டும்.
படித்து பார்க்க தெரியவில்லை என்றால் படித்த வழக்கறிஞர் ஒருவரிடம் அது பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
அண்ணாமலை படித்த முட்டாள்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வேலை வெட்டி இல்லாத நபர். அவர் படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டிக் கொள்வார். அவரைப் போலவே அவரது கட்சியின் மாவட்ட தலைவரும் செயல்படுகிறார் என்று பதிலளித்தார்.
ஏற்கனவே விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 50,000 மின் இணைப்புகள் இன்னும் இரண்டு வார காலத்தில் தமிழக முதல்வர் துவக்கி வைப்பார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.