தடையை மீறி போராட்டம் - அண்ணாமலை மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
கடந்த 26ம் தேதி சென்னை கே.கே.நகரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக், பாஜக பெண் நிர்வாகிகளான குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை தரக்குறைவாக பேசினார்.
இவரின் பேச்சு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு திமுக எம்.பி கனிமொழி வருத்தம் தெரிவித்தார்.
சைதை சாதிக் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் நேற்று வள்ளூவர்கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து பின்னர் மாலை விடுவித்தனர்.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 370 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.