அதிமுக - பாஜக இடையே மோதலா? டெல்லி செல்லும் அண்ணாமலை மற்றும் ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லி செல்கின்றனர்.
டெல்லி செல்லும் ஆளுநர்
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னையிலிருந்து, டெல்லிக்கு பயணம் செய்கிறார்.

தமிழக சட்டசபையில் இன்று ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா நிறைவேற்றப்படும் நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் கவனம் பெற்றுள்ளது.
அண்ணாமலை அடுத்த கட்ட மூவ்
அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று காலை 11 மணியளவில் டெல்லிக்கு செல்கிறார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக கூட்டணி குறித்து மோதல் கருத்துக்கள் எழுந்துவந்து நிலையில் அண்ணாமலை டெல்லி சென்று பாஜகவின் தலைமை நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலை இன்று மதியம் பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.