கமலாலயம் வாசலில் காத்திருப்பு : அண்ணாமலையுடன் ஈபிஎஸ் அணி சந்திப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்தித்துள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து பரபரப்பாக இயங்கி வருகிறது. திமுக சார்பில் ஏற்கனவே கூட்டணி மூலம் வென்ற காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிட உள்ளது.
ஈபிஎஸ் அணி சந்திப்பு
அதிமுக சார்பில் அதிமுகவே நேரடியாக போட்டியிடும் என இபிஎஸ் தரப்பு அறிவித்து விட்டது. அதே போல தங்கள் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள். கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டும் வருகின்றனர். அதே போல் ஓபிஎஸ் தரப்பிலும் இடைத்தேர்தல் பணிகளை துவங்கி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருவதால் அதிமுக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளளது.
இந்த நிலையில் பாஜகவின் ஆளுமை இல்லாமல் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரிவு வேட்பாளரை அறிவிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஈபிஎஸ் தரப்பிப்னர் அண்ணாமலையை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலையினை சந்திக்க ஈபிஎஸ் அணியினர் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கக்கோரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சியில் தலைவர் அண்ணாமலை தெரிவிப்பார் என தெரிவித்துள்ளார்.