என்ன பயந்துட்டியா குமாரு! - வைரலாகும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் டுவிட்

election bjp candidate annamalai
By Jon Mar 22, 2021 01:11 PM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை மறைத்திருப்பதாக புகார் எழுந்ததால் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது.

திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் அண்ணாமலை மனுவை ஏற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை ‘என்ன பயந்துட்டியா குமாரு! அந்த ஆண்டவனே நம்ம பக்கம் ’ என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.