காவடி ஆடிய அண்ணாமலை...உற்சாகமடைந்த பாஜக தொண்டர்கள்

Tamil nadu BJP K. Annamalai
By Karthick Aug 30, 2023 07:45 AM GMT
Report

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையின் போது, கோவை பேரூர் கோவில் திருவிழாவில் காவடி ஆடிய வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அண்ணாமலை பாதயாத்திரை

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகமெங்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார். "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

annamalai-dances-with-kaavadi

ஜூலை மாதம் இறுதியில் துவங்கிய இந்த பாதயாத்திரையில் ஒவ்வொரு தொகுதியிலும் தொடர்நது மக்களை சந்தித்து ஆளும் திமுக அரசு குறித்து கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டு வரும் அண்ணாமலை , தற்போது கோவை மாவட்டத்தை வந்தடைந்துள்ளார்.

காவடி ஆடிய அண்ணாமலை

கோவை பேரூரில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் நொய்யல் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நொய்யல் திருவிழாவின் ஐந்தாம் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பங்கெடுத்து கொண்டார். 

annamalai-dances-with-kaavadi

நிகழ்ச்சியில் பங்கெடுத்து கொண்ட அவர், அங்கு காவடி ஆடி கொண்டிருந்த கலைஞர்களுடன் இணைந்து காவடி அண்ணாமலை ஆடிய நிலையில், அங்கு குழுமியிருந்த பாஜக தொண்டர்கள் பலரும் ஆரவாரத்துடன் கோஷங்கள் எழுப்பிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.