கொடைக்கானல் குளிரில் ஜாலியாக குத்தாட்டம் போட்ட அண்ணாமலை...!
"என் மண் என் மக்கள்" பாதயாத்திரையின் 2-ஆம் கட்டத்தை துவங்கியிருக்கும் அண்ணாமலை நேற்று கொடைக்கானலில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
என் மண் என் மக்கள்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகமெங்கும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றார். ஜூலை 28-ஆம் தேதி துவங்கிய இந்த பயணத்தின் இரண்டாம் கட்ட பாதயாத்திரையை மீண்டும் துவங்கி மேற்கொண்டு வருகின்றார்.
இதில் ஒரு பகுதியாக அண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபயணத்தை நேற்று கொடைக்கானலில் இருந்து தொடங்கினார் அண்ணாமலை.
ஆட்டம் போட்ட அண்ணாமலை
கொடைக்கானல் நாயுடுபுரத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கிய நிலையில், நகரின் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணாமலை பிரசாரம் செய்து வந்தார். அப்போது ஒரு இடத்தில் திடீரென காட்டு எருமை, பாதயாத்திரை கூட்டத்துக்குள் நுழைந்த நிலையில், பாஜகவினர் சிதறி ஓடினர்.
பின்னர் பாஜக நிர்வாகி ஒருவர் தமது குதிரையை கொடுத்து அதில் ஏறி அமர்ந்து சவாரி செய்ய கேட்டுக் கொண்டார். இதனை அண்ணாமலை ஏற்று குதிரை மீது ஏறி அமர்ந்து நிர்வாகியின் ஆசையை நிறைவேற்றினார். இரவில் பழங்குடி மக்களுடன் இணைந்து ஆட்டம், பாட்டு என ஆடியும் பாடியும் மகிழ்ந்தார் அண்ணாமலை.