அதிமுகவினரின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் : கோரிக்கை வைக்கும் சீமான்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும், ஆட்சி செய்தவர்கள் மீதும் உள்ள ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.
சீமான்
திமுகவின் ஊழல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அண்ணாமலை திமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டதால் அதிமுகவில் இருப்பவர்கள் எல்லாம் பரிசுத்தமானவர்கள் அல்ல? யார் ஊழல் செய்தாலும் அவர்களுடைய ஊழல் பட்டியலை அவர் வெளியிடுவாரா?
அதிமுக ஊழல் பட்டியல்
ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை, ஊழல் செய்தவர்களோடு கூட்டணி வைக்க மாட்டேன் என சொல்வாரா?. நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும், ஆட்சி செய்தவர்கள் மீதும் உள்ள ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட வேண்டும் என்றார்.