நெருங்கும் தேர்தல் - திடீரென கூடும் பாஜக..! முக்கிய முடிவில் அண்ணாமலை..!

Tamil nadu BJP K. Annamalai
By Karthick Jan 11, 2024 10:00 PM GMT
Report

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழக பாஜக

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றது. மற்ற மாநிலங்களை தவிர்த்து தமிழகத்தை எடுத்துக்கொண்டால் இந்த தேர்தல் தமிழக பாஜகவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

annamalai-consultation-with-election-official

பெரிய கட்சியாக பாஜகவை கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றி வரும் அண்ணாமலைக்கும் இது பல வகையில் சவாலான தேர்தலாகவே அமைகிறது. 2026-ஆம் ஆண்டு தேர்தலை அக்கட்சி குறிவைக்கும் நிலையில், தனித்து தங்களது வாக்கு வங்கியை பலப்படுத்தவும் அண்ணாமலைக்கு இந்த தேர்தல் பெரிதும் உதவும்.

ஆலோசனை கூட்டம்

இந்த சூழலில் தான் அண்மையில் 39 மக்களவை தொகுதிக்கும் மற்றும் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமித்திருந்தார் அண்ணாமலை. ஏற்கனவே இந்த பொறுப்பாளர்களுடன் கடந்த மாதம் 8-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தினார் அண்ணாமலை.

annamalai-consultation-with-election-official

இதனைத்தொடர்ந்து பொறுப்பாளர்களுடன் மீண்டும் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை. இந்த கூட்டத்தில், தேர்தல் வியூகம், கூட்டணி முடிவுகள் போன்றவை ஆலோசிக்கபடவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.