சகோதரிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் : கனிமொழிக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலை
திமுக எம்பி கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை திமுக எம்பி கனிமொழி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் :
எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி கனிமொழி எம்.பி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி @KanimozhiDMK அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) January 5, 2023