அதை செய்தவரை சிறையில் தள்ளுங்கள் - விஜய்க்கு ஆதரவாக இறங்கிய அண்ணாமலை
விஜய்யின் தனிப்பட்ட போட்டோகளை வெளியே விட்டவர்களை சிறையில் தள்ள வேண்டும் என அண்ணாமலை பேசியுள்ளார்.
விஜய்
த்ரிஷா பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் வைத்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமண நிகழ்வில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தனி விமானத்தில் ஒன்றாக சென்றதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியானது.
அண்ணாமலை
இந்நிலையில் கோவை விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதில் பேசிய அவர், " நடிகர் விஜய் இன்று அரசியலுக்கு வந்துள்ளார். கடந்த வாரம் விஜய், திருமணத்திற்காக கோவாவிற்கு சென்றார். விமான நிலையத்தில் அவர் சோதனைகுள்ளாக்கப்படும்போது, அவரது தனிப்பட்ட போட்டோ வெளியே வந்துள்ளது. அது எப்படி வெளியே வந்தது?
விஜய் யாருடன் வேண்டுமானாலும் தனி விமானத்தில் செல்லலாம். விஜயுடன் யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அந்த போட்டோவை எடுத்தது யாரு.? போரவங்க, வரவங்களை போட்டோ எடுப்பதுதான் மாநில உளவுப்பிரிவின் வேலையா? போட்டோ எடுத்து ஐடி விங்கிற்கு கொடுப்பதுதான் அவர்கள் வேலையா?
அம்பேத்கர்
ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. விஜய் பாஜகவிற்கு எதிராக பேசினாலும் கூட மாநில தலைவராக இதை சொல்கிறேன். இதுதான் திமுகவின் அரசியல் நாகரீகம், இதுதான் திமுக மக்களை மதிக்கின்ற லட்சணமா? விமானத்துறை அமைச்சருக்கு இது தொடர்பாக தமிழக பாஜக கடிதம் எழுத உள்ளது. சிசிடிவியை ஆராய்ந்து போட்டோ எடுத்தது யார் என கண்டுபிடித்து கைது செய்யுங்கள் FIR போட்டு சிறையில் தள்ளுங்கள்.
விஜய் இத்தனை ஆண்டுகாலம் நடிப்பில் பிஸியாக இருந்ததால், பிரதமர் மோடியின் அரசியலை உற்று நோக்கினாரா என்பது தெரியவில்லை. அம்பேத்கரின் வழியில் அரசியல் செய்து, நாட்டு மக்களுக்கு நல்லது செய்தது யார் என்பதை அவர் சொல்ல வேண்டும். அம்பேத்கர்கொள்கைக்கு எதிராக பாஜக என்ன செய்தது என சுட்டிக்காட்ட வேண்டும். அம்பேத்கர் ஆதரித்து தான் ஒரே நாடு ஒரே தேர்தல்" என பேசினார்.