திண்டுக்கலில் கைது செய்யப்பட்ட எச்.ராஜா ... கடுப்பான அண்ணாமலை

M K Stalin BJP Governor of Tamil Nadu K. Annamalai H Raja
By Petchi Avudaiappan May 18, 2022 06:47 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

திண்டுக்கல்லில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பழனி இடும்பன் கோவில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர், பாஜக நிர்வாகிகள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். 

ஆனால் காவல்துறையினர் இதற்கு அனுமதி வழங்காத நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜாவை பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் அங்குள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல், பழனி உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரவு 8.340 மணியளவில் எச்.ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். 

இந்நிலையில் எச்.ராஜா கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் “மூத்த தலைவர் அண்ணன் எச்.ராஜா அவர்கள் பழனி இடும்பன் குளத்தை பாதுகாப்பதற்காக ஆரத்தி திருவிழாவிற்கு செல்லும் வழியில் காவல்துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, நம் போராட்டத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்! குளத்தை திருடும் கும்பலை விட்டுவிட்டு பாதுகாக்க செல்லும் அண்ணன் ராஜா அவர்களை கைது செய்யும் முதல் அரசு நம்முடைய விடியாத அரசாகத்தான் இருக்கும்!” என தெரிவித்துள்ளார். 2