6.6 லட்சம் கோடி தானா..? உத்தரப்பிரதேசத்தில எவ்ளோ தெரியுமா..? அண்ணாமலை அட்வைஸ்
நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
6.6 லட்ச கோடி தானா.?
இது குறித்து அவர் பேசும் போது, உத்தரபிரதேசம் மாநிலம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் 33.51 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்ததாக குறிப்பிட்டார்.
அதே போல, அம்மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி முதலீடு பெறப்பட்டதாக கூறிய அவர், 2022-ல் கர்நாடகா 9 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தது என்றும் குறிப்பிட்டார்.
அதிகரிக்கணும்
குஜராத்தில் முதலீட்டாளர் மாநாடு தொடங்குவதற்குள் ரூ. 7 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்று குறிப்பிட்டு, தமிழகத்தில் குறைந்தது 10 லட்ச கோடி முதலீடாவது வரும் என எதிர்பார்த்ததாக கூறினார்.
தமிழக அரசு இலக்குகளை அதிகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், முன்னதாக அதானி குறித்து விமர்சனங்களை வைத்த திமுகவினர் தற்போது அவரின் கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார்.