Dress Code: பாஜக அண்ணாமலை விளக்கம்

K. Annamalai
By Fathima Apr 23, 2026 11:33 AM GMT
Report

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமாலை விஜய் அணியும் உடை பாணியில் உடை அணிந்து வந்து தனது வாக்கினை செலுத்தியது விவாதத்தை கிளப்பியுள்ளது.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் முறையில் மாலை 3 மணிநேர நிலவரப்படி 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

வெயில் காலம் என்பதால் காலை 7 மணிமுதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் இளைஞர்கள் விஜய் அணியும் உடை நிறங்களில் வந்து வாக்களித்தனர்.

Dress Code: பாஜக அண்ணாமலை விளக்கம் | Annamalai Clarification About Dress Code

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் அதே நிறத்தில் உடை அணிந்திருந்தது விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில் விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை, காவல்துறையில் இருந்ததால் எப்போதும் காக்கி பேண்ட், அரசியலுக்கு வந்த பிறகு வெள்ளை சட்டை போட்டுகிறேன், ஜெகன் மோகன் ரெட்டி, விஜய் இதே நிறத்தில் போடுகின்றனர், என் Dress Codeக்கும் எந்த குறியீடும் இல்லை என தெரிவித்துள்ளார்.