நீதிபதி தலைமையில் ஆடிட் செய்யணும்...4,000 கோடிக்கு என்ன நடந்தது...அண்ணாமலை சவால் !
4000 கோடி ரூபாயை சென்னை வடிநீர் கால்வாய் பணிக்காக செலவிட்டதாக தமிழக அரசு தெரிவித்ததை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மழை - வெள்ளம்
2015-ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற இடங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றார். அரசும் மீட்புப்பணிகள் முடக்கிவிட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆளும் அரசு மீது சரமாரியான கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தான் தமிழக அரசிடம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முதல்வருக்கு சவால்
செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மழை நீர் வடிகால் பணிக்காக கொடுத்த 4000 கோடி ரூபாய் என்னவானது எனக்கூறி, அந்த பணமெல்லாம் எங்கே என்றும், பணியில் யார் ஒப்பந்ததாரர், என்ன மாதிரியான பணிகள் நடந்தது,
எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் போன்றவை சென்னை நீதிமன்ற சிட்டிங் நீதிபதி தலைமையில் ஆடிட் செய்ய வேண்டும் என கேள்விகளை எழுப்பினார்.
இந்த சவாலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா என்று சவால் விட்டுள்ள அண்ணாமலை, மக்கள் பணியில் நேரடியாக திமுகவினர் இறங்கியிருக்க வேண்டும் என்றும் ஆனால் அவர்கள் டிபன்ஸ் மோடில் தான் வேலை செய்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.