அண்ணாமலை உண்ணாவிரதம் இருந்தால் எனக்கென்ன? காவிரி நீர் எங்கள் உரிமை: கர்நாடக முதல்வர் அதிரடி பேச்சு!

karnataka bjp Annamalai Basavaraj Bomma Cauvery water
By Irumporai Jul 31, 2021 09:43 AM GMT
Report

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளார்.

கர்நாடக அரசின் இந்த நிலைப்பாட்டை கண்டித்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி டெல்டா பகுதியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

மேலும் ,கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட ஒரு சிறிய செங்கல்லை கூட வைக்க விடமாட்டோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் டெல்லியில் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் அண்ணாமலை உண்ணாவிரதம் இருக்கப் போவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பசவராஜ், அண்ணாமலை உண்ணாவிரதம் இருந்தாலும் அதை பற்றி கவலை இல்லை.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கும் உரிமை உண்டு. காவிரி நீர் எங்கள் உரிமை.

ஏற்கனவே கர்நாடக அரசு முதல் திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. இதற்கு ஒப்புதல் பெற்று திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி  என கூறினார்.