அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் கொத்தாக பணம் - காங்கிரஸ் பரபர புகார்!
அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் புகார்
கர்நாடகா மாநிலத்தில், வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, கர்நாடாகா தேர்தலுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உடுப்பியில் பேசிய வினய் குமார் சொரகே, ‘காவுப் தொகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை,

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக, கட்டுக்கட்டாக பணம் நிரம்பிய மூட்டைகளுடன் வந்திருக்கிறார். வரும் தேர்தலில் வெற்றிபெற, பாஜக வேட்பாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்துவருகிறது. இது குறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவித்திருக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.
பணப்பட்டுவாடா
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, ‘‘தேர்தல் பணிக்காக பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், ஹெலிகாப்டர் பயன்படுத்தி பயணித்து வருகிறேன். வினய் குமார் சொரகே, தேர்தல் பயத்தால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்துகிறார்’’ என மறுத்தார்.
இதற்கிடையில், அண்ணாமலையின் வாகனம், தங்கியிருந்த ஹோட்டல், பாஜகவினரின் வாகனங்கள், மேலும் 4 இடங்களை பறக்கும் படையினர் 2 நாட்களாக சோதனை செய்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை அண்ணாமலை மீறவில்லை, பணம் பட்டுவாடா ஏதும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan